நமது செயல் திறனையும், கவனத்தையும் அதிகப்படுத்துவதற்கு உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்கவேண்டும். எனவே தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என உணவு கட்டுப்பாட்டு ஆலோசகர் அறிவுறுத்துகிறார்.
நமது உடலில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு வியர்வைத்துளி மூலமும் நாம் உப்புச் சத்தை இழக்கிறோம். அதோடு நம் உடலில் நீர்ச்சத்தும் குறைந்து நாம் சோர்வடைகிறோம்.
எனவே உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டுமானால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என மெல்போர்னைச்சார்ந்த உணவு கட்டுப்பாட்டு ஆலோசகர் விசா கதர்லாண்டு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளாது. மேலும் அவர் கூறியதாவது
உடலில் நீர்ச்சத்து குறைவதால் தலைவலி ஏற்படுவதோடு, நமது கவனமும் சிதறும். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போடு அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இயல்பான நிலையில் நமது உடலில் நாளொன்றுக்கு 2-3 லிட்டர் நீர்சத்து சுரக்க வேண்டும். நாம் அருந்தும் தண்ணீர் மற்ரும் திரவ உணவுமூலமே இதை எட்ட முடியும். குறிப்பாக தினமும் நாம் அருந்தும் தண்ணீர் மூல்மே நமது உடலில் தேவையான அள்வு நீர்ச்சத்து சுரப்பதை உறுதி செய்ய முடியும்.
இயல்பான் தட்பவெப்ப நிலையில், பெரும்பாலானோர்க்கு தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. ஆனால் கடும் வெப்பம் நிலவும் காலத்திலும், உடற்பயிற்ச்சி செய்யும் போதும் இதை விட அதிக அள்வு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பெரும்பாலனோர் தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்கின்றனர். அவ்வாறில்லாமல் அடிக்கடி தண்ணீர் குடுக்க வேண்டும்.



No comments:
Post a Comment