Breaking

LightBlog

Tuesday, December 20, 2011

உயிர் வாழ இன்றியமையாத வைட்டமின்கள்!!


நாம் உயிர் வாழ உடலுக்கு முக்கியமான உயிர் சத்துக்கள்(வைட்டமின்கள்) தேவைப்படுகின்றன. நாம் நம் உடலுக்கு தேவையான உயிர் சத்துக்களை தெரிந்து கொண்டு அதை உட்கொள்வது மிகவும் அவசியம்.
உடலுக்கு தேவையான உயிர் சத்துக்கள்:
வைட்டமின் ஏ: மாலை கண், கண் பார்வை, தோல் பொலிவு போன்றவற்றிற்கு இந்த வைட்டமினை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்: அன்னாசி, பப்பாளி, மா, பலா, கொய்யா, கேரட்.
வைட்டமின் பி: உடல் வலி, நரம்பு ஊட்டத்துக்கும், உடல் வனப்பு, வயிற்றுப்புண், வாய்ப்புண் இவை அனைத்தும் குணமாவதற்கு இச்சத்து அவசியம்.
காய்கள் மற்றும் பழங்கள்: வாழைப் பூ, சாம்பல் பூசணி, முருங்கைக்காய், கீரை.
வைட்டமின் சி: ரத்த ஓட்டத்திற்கும், தூய்மைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம்.
காய்கள் மற்றும் பழங்கள்: எலும்பிச்சை, அன்னாசி, பப்பாளி, தக்காளி, நெல்லிக்காய், ஆரஞ்சு.
வைட்டமின் டி: உடலுக்கு ஊட்டச்சத்து, வலிமையையும் கொடுக்கும். இச்சத்து குறையும் போது தோல் நோய்கள் உண்டாகும்.
காய்கள் மற்றும் பழங்கள்: சூரிய ஒளி, முட்டை, மீன், தேங்காய், கடலை.
வைட்டமின் ஈ: ஊக்கத்தையும், உயிரணுக்களையும், கருத்தரித்தலுக்கான முட்டைகளையும் தோற்றுவிப்பது, வளர்ப்பது, ஆண்மை மற்றும் பெண்மையை வளர்ப்பதும் இந்த வைட்டமின் ஆகும்.
காய்கள் மற்றும் பழங்கள்: முருங்கைக்காய், விதை, முந்திரிப்பருப்பு, பேரிச்சம்பழம்.
வைட்டமின் கே: ரத்த உறைதலுக்கு உறுதுணையாக இருக்கிறது. ரத்தத்தின் தூய்மையை காக்கிறது. நாம் உட்கொள்ளும் துவர்ப்பு சுவையில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.
காய்கள் மற்றும் பழங்கள்: வாழைப் பூ, அத்திக்காய், மாதுளை, நெல்லி, கொய்யா.

No comments:

Post a Comment

Adbox