Breaking

LightBlog

Tuesday, December 13, 2011

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்



கொத்துமல்லி, புதினா போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றோம்.ஆனால் கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை. கறிவேப்பிலை கீரை வகையை சேர்ந்தது இல்லை என்ற போதிலும் கீரைகளில் இருக்கும் அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.
கறிவேப்பிலையில் வைட்டமின் பி, பி2, ஏ, சி, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. கறிவேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தி காயவைத்து பொடி பொடியாக ஆக்கி கஷாயம் செய்து காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம்.
கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு நீரில் அலசி அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம், 2 பூண்டு, புதினா அல்லது கொத்தமல்லியை கலந்து நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து உண்டு வந்தால் மன உளைச்சல், மன இறுக்கம், மன அழுத்தம் குறைந்து மனநிலை சீராக மாறும். உடல் புத்துணர்வு பெறும்.
கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலோ அல்லது தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி ஆறவைத்து அதை தினமும் தலையில் தேய்த்து வந்தாலோ இளநரை மாறும்.
ஒரு லிட்டர் எண்ணெயில் பத்து கறிவேப்பிலையை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு சத்து நீங்கும். கறிவேப்பிலை குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும்.
கண் பார்வையை தெளிவடைய செய்யும். இரத்தத்தை சுத்தம் செய்யும். மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாரை கொடுத்தால் போதை உடனே குறையும்.

No comments:

Post a Comment

Adbox