Breaking

LightBlog

Tuesday, December 13, 2011

மின்னஞ்சலில் தினம் ஒரு புத்தகம் படிப்பதற்கு



புத்தகம் படிப்பதற்கு மிக சுலபமான வழியைக் காட்டுகிறது டிப்ரீட் இணையத்தளம்.ஆசை ஆசையாக புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அதை படிக்க நேரம் இல்லாமல் அப்படியே அலமாரியில் வைத்திருக்கும் நபர்கள் இந்த தளத்தை நாடலாம். அப்படி நாடினால் படிக்க நினைத்த புத்தகத்தை நிச்சயம் படித்து முடித்து விடலாம்.
ஆனால் உடனடியாக இல்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாக, அது இந்த தளத்தின் சிறப்பு.
படிக்க நினைத்தவர்கள் மறந்தாலும் சரி, இந்த தளம் புத்தகத்தை ஒவ்வொரு பக்கமான நினைவுப்படுத்தி கொண்டே இருக்கும். அதாவது தினமும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி கொண்டே இருக்கும்.
மின்னஞ்சல் வாயிலாக நினைவுப்படுத்தியது போலவும் இருக்கும். மின்னஞ்சல் மூலமே படித்தது போலவும் இருக்கும்.
இதற்காக அதிக கஷ்டப்பட வேண்டியதில்லை. தளத்தில் நுழைந்து எந்த புத்தகம் தேவையோ அதனை தெரிவு செய்து  மின்னஞ்சல் முகவரியை சமர்பித்தால் போதும், அதன் பிறகு நாள்தோறும் அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாக மின்னஞ்சலில் வந்து சேரும்.
தினமும் மின்னஞ்சல் பெட்டியை திறக்கும் போது புத்தகத்தின் அன்றைய பகுதியையும் படித்து முடித்து விடலாம்.
வழக்கமான புத்தகத்தளத்தில் உள்ளது போல ரகம் வாரியாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து பிடித்தமானதை தெரிவு செய்து கொள்ளலாம். எல்லாமே இபுக் வடிவிலானவை.
இந்த பட்டியலில் உள்ளவை தவிர நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட புத்தகத்தை படிக்க விரும்பினாலும் அதனை இங்கே சமர்பித்தால் தினமும் மின்னஞ்சலில் ஒவ்வொரு பக்கமாக வந்து சேரும்.
புத்தக பிரியர்களுக்கு சுவாரஸ்யமும் பயனும் நிறைந்த சேவை என்பதில் சந்தேகமில்லை.
மிகவும் தீவிர புத்தக புழுக்கள் கூட இந்நேரங்களில் புத்தகத்தை வாங்கி வைத்து விட்டு உடனே படிக்க முடியாமல் திண்டாடுவது உண்டு. சராசரி வாசகர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். சோம்பல் வேலை பளு என பல காரணங்களால் எடுத்த புத்தகத்தை முடிக்க முடியாமல் முழித்து கொண்டிருப்பார்கள்.
இதற்கான அழகான தீர்வாக தான் டிப்ரீட் புத்தகங்களை ஒவ்வொரு பக்கமாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறந்து. அந்த காலத்தில் தொடர்கதை படிப்பது போல இந்த காலத்தில் மெகா சீரியல் பார்ப்பது போல படிக்க விரும்பும் புத்தகத்தை நிதானமாக ஆனால் நிச்சயமாக படித்து விடலாம்.
இணையதள முகவரி

No comments:

Post a Comment

Adbox