Breaking

LightBlog

Sunday, December 18, 2011

ஆரோக்கியமாக வாழ்வதற்கு



தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள், பற்களையும் சுத்தம் செய்யுங்கள்.சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால் உடலில் ஏற்படும் சுருக்கங்களை கண்டறியலாம்.
உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.
முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள், அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
தினமும் குறைந்தது 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும், தொந்தியும், வயிறும் குறையும்.
குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.
படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.
முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.
கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.
உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.
அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால் மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள், அது உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.
தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
தினமும் காலையில் 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Adbox