இளமைப்பருவத்தில் அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஆனால் இதுவே அவர்களின் வாழ்க்கையை தீய வழிக்கு கொண்டு சென்றுவிடும். முக்கியமாக பெற்றோர் இது தொடர்பாக கவனமெடுக்கவேண்டும். சிறுவர்களை இணைய செயற்பாடுகளில் இருந்து பாதுகாப்பதற்கு மேலத்தேய நாடுகளில் கடினமான சட்டங்கள் அமுலில் உள்ளது. எனும் பாதிக்கப்படுபவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். சரி நாம் இவற்றில் இருந்து எப்படி சிறுவர்களை பாதுகாக்கலாம் என இனிப் பார்க்கலாம். வீடுகளில் சிறுவர்கள் இணையத்திளை பாவிக்கும் சந்தர்ப்பங்களில் பில்டர்களினை (Cyper patrol) உபயோகிக்கலாம். உதாரணமாக தேடுபொறிகள் அதிகமாக ஆபாசத் தளங்களையே முன்னிலைப்படுத்திக் காட்டும் ஏனெனில் அதுதான் அவர்களின் விளம்பர உத்தி. நாம் இவ் பில்டர்களை பாவிக்கும் போது நாம் குறிப்பிட்ட சொற்களை இணையத்தில் காட்டாத பிரசுரிக்காத வண்ணம் நாம் செய்து கொள்ளலாம். மற்றும் சிறுவர்களின் நடவடிக்கைகளினை இணையத்தில் கண்காணிப்பதற்கு கிலோக்கர்களினை (Key logger) உபயோகிக்கலாம். இவை கணணியை இயக்கியதில் இருந்து அவர் கணணியில் என்ன செய்கிறார் என்கின்ற அனைத்து தரவுகளையும் அவருக்குத் தெரியமால் இவை சேமிக்கும். தேவையெனில் நிமிடத்துக்கொரு தரம் கணணியில் என்ன செய்கிறார் என்னபதனை Screen Shot மூலமாக பிடித்து சேமித்தும் வைக்கக் கூடியவை இந்த கீலோக்கர்கள். இவற்றினை உபயோகிப்பதன் மூலம் சிறுவர்களுக்கு தெரியமாலே அவர்களை நாம் பாதுகாக்கலாம். |
Sunday, November 13, 2011
குழந்தைகளை ஆபாச தளங்களிலிருந்து பாதுகாக்கும் வழிகள்
Tags
# Internet
About Ragavan
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Internet
Labels:
Internet
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment