சிறிய கோப்பென்றால் பிரச்சினையில்லை. பெரிய கோப்புகளைத் தரவிறக்கும் போது சிலருக்குக் காத்திருக்கப்பிடிக்காது. பயர்பொக்சில் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியும் வைக்க முடியாது. தரவிறக்கம் முடியும் வரை நாமும் கணணியை அணைக்காமல் வைத்திருக்க வேண்டும். இந்த மாதிரி நிலைகளில் தரவிறக்கம் முடிந்தவுடன் விண்டோஸ் தானாகவே அணைத்துவிடப்பட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும் என நினைப்போம். இதற்கு உதவுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பயர்பொக்ஸ் நீட்சி தான் Auto Shutdown NG. இந்த நீட்சியின் மூலம் பயர்பொக்சில் தரவிறக்கும் செயல் முடிந்தவுடன் கணணியை தானாகவே அணைத்து விடமுடியும். இதனால் நாமும் கணணியோடு சேர்ந்து காத்திருக்கத் தேவையில்லை. இந்த நீட்சியை நிறுவிய பின்னர் Firefox Addons சென்று AutoShutdown Option இல் உங்கள் இயங்குதளத்தைத் தேர்வு செய்து விட்டால் போதும்.அடுத்து எதாவது ஒரு கோப்பை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யும் போது அதன் டவுன்லோடு மேனேஜர்(Firefox Download manager) விண்டோவின் அடியில் கணணியை அணைப்பதற்கான(Shut down) பட்டன் ஒன்று புதியதாக வந்திருக்கும். இதனை ஒருமுறை கிளிக் செய்தால் இது சிவப்பு நிறத்தில் மாறிவிடும். உங்களுக்கு தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை அணைக்க வேண்டுமென்றால் ஒரு முறை கிளிக் செய்தால் போதுமானது. கணணியை அணைக்க வேண்டாம் என்றால் மீண்டும் அந்த பட்டனையே கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் உங்கள் வேலையைச் செய்யலாம். எல்லா கோப்புகளும் தரவிறக்கி முடிந்தவுடன் இந்த நீட்சி கண்டறிந்து கணணியை அணைத்து விடும். தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை அணைக்கப்போவதற்கு முன் ஒரு அறிவிப்பு வரும். நீங்கள் கணணியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனில் அதனை கேன்சல் செய்தால் போதும். கணணி அணைக்கப்படுவது நிறுத்தப்படும். பெரிய அளவிலான கோப்புகளை இரவு நேரத்தில் தரவிறக்க இந்த நீட்சி பயனுள்ளதாக இருக்கும். தரவிறக்க சுட்டி |
Sunday, November 13, 2011
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே அணைவதற்கு
Tags
# Internet
About Ragavan
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Internet
Labels:
Internet
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment