Breaking

LightBlog

Saturday, March 26, 2011

கைத்தொலைபேசிகள் மூளை செல்களை அழிக்கும்





கைத்தொலைபேசிகளை உபயோகிப்பது மூளையை பாதிக்கும் என்றும், மூளை செல்களை அழிக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இது தான் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகவும் காரணமாக அமைகிறது. நூற்றுக்கணக்கான கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் நடத்திய ஆய்வில் ஒவ்வொரு அழைப்பின் போதும் வெளிப்படும் சிக்னல்கள், மூளையின் இரசாயன மாற்றங்களை 7 சதவீதமாக அதிகமாக்குகின்றன என்பது தெரிய வந்துள்ளது.
இத்தகைய “மூளை மெட்டாபாலிசம்” கைத்தொலைபேசிகளின் ஆன்டனாவை தலைக்கு அருகிலோ, முகத்திற்கு அருகிலோ படும் படி வைத்தால் உண்டாகிறது. கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை வெளியிடுவதாகவும், அவை மூளை செல்களின் வெப்பத்தை அதிகப்படுத்தவதாகவும் ஏற்கனவே ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.
தூங்கும் போது தலைக்கு அருகில் கைத்தொலைபேசிகளை வைத்து தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைத்தொலைபேசி நிறுவனங்களுமே இதைத்தான் பரிந்துரை செய்கின்றன.

No comments:

Post a Comment

Adbox