ஏமாற்றம்

அம்மாயி வீட்டு வாசல்
சாணம் மணக்கும்
மாக்கோலம் போடுவாங்க
பின்ன அவங்க வாசல்
சிமெண்ட் ஆச்சு
மாமாலு கோல மாவுல தான்
கோலம் போடுவாங்க
இப்போ மாமாலு மருமக
பெயிண்ட் அடிச்சி
வாசல்ல நிரந்தரமா
கோலம் போட்டு இருக்கா
பெயிண்ட் கோலம் முகர்ந்த
எறும்பு கொஞ்சம் தடுமாறி
வாசல் தாண்டி
சமையலறை சக்கரை டப்பா
தேடி வந்துச்சி



No comments:
Post a Comment