மீன் குட்டிகளும் பிளாஸ்டிக் பை நீரும்

நேற்றே பிறந்த மீன்குட்டிகள்
பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டன
பிறந்த இடத்தின் நினைவுகள்
உயிர் காக்கும் நீராக நிறைந்திருந்தது
பிளாஸ்டிக் பையெங்கும்
பிரிய கண் விரிய
வந்த ஒரு குழந்தை
பிடித்த மீன்குட்டிகளோடு
தன் வீட்டிற்கு வந்தனள்
தொட்டியில் அவிழ்க்கப்பட்ட
பிளாஸ்டிக் பை நீர்
தன் அடையாளம் முற்றும்
தொலைத்து மீன் தொட்டி நீரானது
மல்க மல்க விழித்த
மீன்குட்டி தொட்டி நீருக்கு
சிறுகச் சிறுக தன்னை பழகி
நீந்தத் தொடங்கியது.



No comments:
Post a Comment