கொய்யாவின் தாவரவியல் பேரு சிடியம் குஜாவா. இது ஒரு புதர்ச் செடி வகையைச் சேர்ந்தது.இலைகள் நீளமாகவும், தடிப்பாகவும் காணப்படும். வெள்ளை நிறத்தில் அழகா பூ பூக்கும். பழம் கோள வடிவத்தில இருக்கும். இந்த மரத்தோட இலை, பட்டை, பழம் என்று எல்லாமே மருத்துவக் குணம் உள்ளவைதான்.
இலைகள் திசுக்களைச் சுருக்கும். ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும். மலச்சிக்கலைப் போக்கும். கசாயம் வாந்தியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கமாக இருந்தால் இந்த கசாயத்தை வாயில் ஊற்றி, கொப்பளிக்கலாம்.
இதோட பட்டை காய்ச்சலைக் குணப்படுத்தும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும். கொய்யாப்பழம் உடலுக்கு உறுதியைத் தரும். தலைச்சுற்றுதல், இளைப்பு போன்றவற்றைக் குணமாக்கும் மருந்து தயாரிக்க உதவுது.



No comments:
Post a Comment