ஆனால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள உஷ்ணத்தை விட குறைவு. மாம்பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்து சாப்பிடுவது நல்லது. காலை உணவு முடித்து 30 நிமிடங்களுக்கு பின் 50 கிராம் மாம்பழச்சாற்றுடன் ஒரு ஸ்பூன் நெய்யும், 1 ஸ்பூன் தேனும் கலந்து அருந்தி வர வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் வயிற்றுப் புண்குணமாகும். மேற்கண்ட முறைப்படி அருந்தி வரும் நாட்களில் மலம் அதிகளவு வெளியேறினால் தேனை இரட்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம். மாம்பழத்தின் சாறுடன் தேன், குங்குமப் பூ, ஏலக்காய்த் தூள், பச்சைகற்பூரம் இவைகளை சிறிதளவு சேர்த்து அதில் காய்ச்சிய பாலைக் கலந்து இரவு உணவுக்குப்பின் அருந்தி வந்தால் இதயம் பலப்படும். சிறு குழந்தைகளுக்கு உணவு சாப்பிட்டப்பின் மாம்பழம் கொடுப்பது நல்லது. மாம்பழத்தை நெய்யில் தடவிக் கொடுப்பது மிகவும் நல்லது. இரவில் பாலும் கொடுத்து வந்தால் குழந்தை கொழுகொழுவென்று வளரும். இரவு உணவின் அளவைக் குறைத்து மாம்பழத் துண்டுகளை சாப்பிட்டு பால் அருந்தினால் உடல் பலமடைவதுடன் செரிமான சக்தியும் கூடும். மாதவிலக்கு சீராக இல்லாத பெண்கள் மாம்பழம் கிடைக்கும் காலங்களில் அதைபாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கு சீராகும். இரவு உணவுக்குப்பின் மாம்பழச் சாறு சாப்பிட்டு வந்தால் முகம் பளபளக்கும். மலட்டுத் தன்மையைப் போக்கி ஆண்மையை அதிகரிக்கும். புளிப்பு மாம்பழச் சாறு 100 மி.லி, அதனுடன் 50 கிராம் நெய் இரண்டையும் கலந்து ஒரு சட்டியில் ஊற்றி 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்து சூடேற்றி இறக்கிக் கொள்ளவும். காலை, பகல் உணவோடு ஊறுகாய்க்குப் பதிலாக சேர்த்துக் கொண்டு வந்தால் உணவு எளிதில் சீரணமாகும். நரம்பு தளர்ச்சிநீங்கும். நீரிழிவு நோய் கொண்டவர்கள், சொறி, சிரங்கு உள்ளவர்கள் மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது. |
Monday, March 26, 2012
ஆயுளை அதிகரிக்கும் மாம்பழம்
About Ragavan
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Medical
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment