Breaking

LightBlog

Monday, March 26, 2012

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தர்பூசணி



தர்பூசணி அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. சி வைட்டமினும் அதிகம் இருக்கிறது.
இதில் இருக்கும் கார்போஹைட்ரேட், சர்க்கரை, புரதம், புரோட்டீன், தையமின், ரிபோபிளேவின், கால்சியம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஒரு மாத்திரையை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம் உள்ள சிலர் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இரு குழுவாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழு தினமும் ஒரு மாத்திரை சாப்பிட்டனர்.
இரண்டாவது குழுவுக்கு வெறும் சோதனைக்காக போலி மாத்திரை கொடுக்கப்பட்டது. 6 வாரங்களுக்கு மாத்திரை கொடுக்கப்பட்டது. தர்பூசணி மாத்திரை சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து சீரான நிலையை அடைந்திருந்தது.
மாரடைப்பு, ஸ்டிரோக் ஏற்பட மிக முக்கிய காரணம் அதிக ரத்த அழுத்தம் தான். தர்பூசணியில் இருக்கும் பொருட்கள் ரத்த தட்டுகளை அகலப்படுத்துகிறது.
இதனால் உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்ப வேண்டிய இதயத்தின் வேலை சுலபமாகிறது. வேலை குறைவதால் இதயம் வலுவடைகிறது. எனவே இதயம் நீண்ட காலம் சிறப்பாக இயங்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

No comments:

Post a Comment

Adbox