இந்நிலையில் துளசியின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்விற்கு எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழுவினர் முதலில் ஸ்ட்ரெப்டோசோசின் என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்க்கரையின் அளவை அதிகரித்தனர். பிறகு துளசி இலையில் இருந்து இவர்கள் கண்டுபிடித்த மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த ஆய்வின் முடிவில் சர்க்கரையின் அளவு குறைக்கப்பட்டிருந்ததோடு, முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், ஈரல் ஆகியவை இந்த துளசி மருந்தால் பாதுகாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. தினசரி இரவில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து அதை காலையில் எழுந்து குடித்து வர நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தினசரி துளசி இலைகளை மென்று தின்றாலும் நீரிழிவு கட்டுப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். |
Monday, March 26, 2012
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் துளசி
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment