Breaking

LightBlog

Thursday, January 19, 2012

WiFiயில் மறந்து போன கடவுச்சொல்லை மீட்பதற்கு!!

அலுவலகம், கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச்சொல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.
 அதை நாம் மறந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம் என்று உதவுகிறது இந்த WirelessKeyView என்ற மென்பொருள்.
முதலில் WirelessKeyView என்ற இந்த  மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். முக்கியமாக நீங்கள் எந்த இணைப்பிற்காக கடவுச்சொல்லை தேடுகிறீர்களோ அந்த இணைப்பில் இருக்க வேண்டும்.(Wi-Fi Area உள்ளே இருக்க வேண்டும்).
அடுத்து உங்கள் மடிக்கணினியில் Wifi ON செய்யப்பட்டு இருக்க வேண்டும். இப்போது மென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள். இதனை ஓபன் செய்ததும் நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கக் கூடிய Wi-Fi இணைப்பு பற்றிய தகவல்களை இந்த மென்பொருள் தரும்.
முதலில் நெட்வொர்க் பெயர், அடுத்து அதன் Key Type, பின்னர் கடவுச்சொல்(Key, ASCII ) போன்றவை கிடைக்கும். இதன் முன்னரே நீங்கள் அந்த இணைப்பை பயன்படுத்தி இருந்திருக்க வேண்டும். மறந்து போன கடவுச் சொல்லை உங்கள் கணணியில் இருந்து இது மீட்டு தரும்.
இது நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் அல்லது பள்ளியில் அல்லது கல்லூரியில் அட்மின் வரவில்லை என்றாலோ, புதிதாக ஏதாவது இணைப்பு கொடுக்கும் பொழுதோ இந்த மென்பொருள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா, எனவே மறவாமல் இப்போதே தரவிறக்கி கொள்ளுங்கள்.

Press Download
http://download.cnet.com/WirelessKeyView/3000-2092_4-10614187.html

No comments:

Post a Comment

Adbox