கடுகின் மூலப்பொருட்கள் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு பல கட்டமாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் கிடைத்த தகவல்கள்: கடுகு செடியில் உள்ள ஹோமோபிராசினோலைட் என்ற மூலப்பொருள் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது. பசியை தூண்டி செரிமானத்துக்கு உதவுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான கடுகு பிராசினோ ஸ்டீராய்ட் என்றும் அழைக்கப்படுகிறது. மூப்படையும் வயதில் தசைகள் அதிகம் சேதமடையாமல் இது பாதுகாப்பு அளிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உடலில் புரதத்தின் அளவை சீராக வைக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரித்து சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. உணவில் கடுகை தினமும் சேர்த்துக் கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். |
Tuesday, December 13, 2011
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடுகு
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment