கடுக்காயில் டேனின், ஆன்த்ரோ குயினான்கள், செபுலிக் அமிலம், ரெசின் மற்றும் எண்ணெய் ஆகியவை காணப்படுகின்றன. டேனின் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுகிறது. துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச் சுத்தம் செய்ய டேனின் உதவுகிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாலேயே கடுக்காய் மருத்துவரின் காதலி எனப்படுகிறது. தான்றிக்காய், நெல்லிக்காயுடன் கடுக்காய் சேர்த்து திரிபாலா எனப்படும் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. தினமும் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்து வர உடல்பலம் ஏற்படும், வயிற்றுக் கோளாறு மாறும். கடுக்காய் தசை இருக்கும் தன்மை கொண்டது. வயிற்றுவலி, அஜீரணம் மற்றும் வயிற்று அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்க இந்திய மருத்துவத்தில் தரப்படுகிறது. கனிகளின் கசாயம் வாய் கொப்பளிப்பாக பயன்படுகிறது. இதன் வலிமை காரணமாகவே முந்தைய காலங்களில் கட்டடம் கட்டும் பணியில் கடுக்காய் அரைத்து பயன்படுத்தப்பட்டது. இது வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமைச்சல், தலைநோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப் பொருமல், விக்கல் போன்றவைகளைக் குணப்படுத்தும். கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி தினமும் இரவு உணவு உண்டவுடன் அரை தேக்கரண்டி குடித்து வர வாதம் குணமாகும். உடல் வலுவடையும். ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டைநோய், வயிற்றுப் புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு. மூக்கில் இருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய் தூளை எடுத்து மூக்கால் உறிய இரத்தம் வருவது நின்றுவிடும். |
Tuesday, December 13, 2011
கடுக்காயின் மருத்துவ குணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment