Breaking

LightBlog

Tuesday, December 13, 2011

எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி



மனித உடலில் உள்ள உறுப்புகள் மிகவும் நுண்ணியமானவை. இந்த உடல் உறுப்புகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது மருத்துவர்கள் மிகுந்த கவனம் எடுக்க வேண்டி உள்ளது.பாதிக்கப்பட்ட பகுதியை சிகிச்சை செய்யும் போது அருகில் உள்ள ரத்த நாளங்கள், நரம்புகள் அறுபடாமல் செயல்பட வேண்டும். தற்போது எலும்பு அறுவை சிகிச்சைக்கு அல்ட்ராசானிக் கத்திகள் வந்துள்ளன.
இந்த மருத்துவ அறுவை சிகிச்சை கத்திகள் வினாடிக்கு 22 ஆயிரத்து 500 முறை துடிக்க கூடியவையாக உள்ளன. இந்த அல்ட்ராசானிக் கத்தி பாதிக்கப்பட்ட எலும்பு பகுதியில் மட்டுமே செயல்படுகிறது.
மென்மையான சதை மற்றும் ரத்த நாளங்கள், நரம்பு பகுதிகளை பாதிக்காமல் இந்த கூர்மையான கத்தி நகர்ந்து செல்கிறது. அதே போன்று முக்கிய திசுக்கள் பாதிக்கப்படாமலும் அவை செயல்படுகின்றன.
அல்ட்ராசானிக் கத்தி மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ள சிகிச்சை ஒன்றை சவுத்தாம்டன் ஸ்பைர் மருத்துவமனையின் நிபுணர் எவான் டேவிஸ் மேற்கொண்டு உள்ளார்.
பின்பக்க முதுகு வழியாக இந்த நவீன கருவி சிகிச்சையை மேற்கொண்டார். அப்போது எலும்பு பகுதி கட்டி கண்டறியப்பட்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டு உள்ளது.
பொதுவான அறுவை சிகிச்சையின் போது தண்டுவடம் பகுதியில் பாதிப்பு ஏற்படாலம். மேலும் கடின பொருட்களை அகற்ற கத்தி பிளேடு போன்றவை பயன்படுத்தப்பட வேண்டி இருக்கும். அதிவேக கருவிகளை நரம்புகள் அருகே பயன்படுத்தும் போது அவை பாதிக்கப்படும் அபாயம் இருந்தது.
ஆனால் அல்ட்ராசானிக்கில் பயன்படுத்தப்படும் கத்தி மிக சிறந்த ஒன்றாக உள்ளது என மருத்துவர் எவான் கூறுகிறார்.

No comments:

Post a Comment

Adbox