Breaking

LightBlog

Tuesday, December 13, 2011

கண்டங்கத்திரியின் மருத்துவ குணங்கள்



கண்டங்கத்திரி தாவரத்தின் அறிவியல் பெயர் சொலேனம் சுரட்டேனஸ் பர்ம். இது ஒரு மருந்து வகை தாவரம்.இந்த தாவரம் முழுவதும் முட்களாக காணப்படும், மலர்கள் கொத்தாக இருக்கும், கனிகள் கோள வடிவத்தில் இருக்கும், விதைகள் தட்டையானவை.
இதன் இலைகளின் சாற்றை மிளகுடன் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்து மூட்டு வலிக்கு மருந்தாக பயன்படுகிறது.
இதன் வேர் ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. இருமல், காய்ச்சலைப் போக்கும், கனிகளின் சாறு தொண்டை வலியைக் குணமாக்குகிறது.
இருமலுக்கு கனிகளைக் காய வைத்து, பொடியாக்கி, தேனுடன் கலந்து பயன்படுத்தலாம்.
விதைகளை எரித்து அதில் இருந்து வரும் புகையை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களை நுகரச் செய்யலாம், அப்போது உடலில் உள்ள சளி நீங்கும். செரிமானத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

No comments:

Post a Comment

Adbox