உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால் முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது. துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும். அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம். |
Tuesday, December 13, 2011
இயற்கை முறையிலேயே சில நோய்களுக்கான தீர்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment