நமது சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்கின்றன. அவை சரிவர இயங்கவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போய்விடும். அப்படியொரு சூழ்நிலை ஏற்படும் போது, அந்த அசுத்த நீர் கண்களைச் சுற்றித் தேங்கி விடும். அவ்வாறு தேங்குவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போல காணப்படும். இப்படியொரு அறிகுறி தென்படும் போது உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். இன்னும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வைத்தியரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம். |
Tuesday, December 13, 2011
நோய்களை காட்டிக் கொடுக்கும் கண்கள்
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment