அதாவது ஆற்று நீர் திரிதோஷத்தால் ஏற்பட்ட நோய்களையும், பித்தகோபத்தையும் மற்றும் தாகத்தையும் தணிக்கும். கிணற்று நீர் அழற்சி, வீக்கம், பித்தம் சுவாசம் முதலியவற்றை நீக்கும். ஏரி நீர் வாதத்தை விருத்தி செய்யும். கடல் நீரானது உதரநோய், சுரம் முதலிய நோய்களைப் போக்கும். வெந்நீரை அருந்த அதாவது நன்றாக காய்ச்சி அருந்துமளவு ஆற்றி பருக வேண்டும். காய்ந்து ஆறிய நீரானது ரத்தபித்தம், சுரம், வாந்தி முதலிய நோய்கட்குச் சிறந்தது. உணவுக்கு முன்பு நீரை அருந்த மந்தத்தையும், உணவுக்கு பின்பு அருந்த சீரணத்தையும், உணவுக்கு இடையிடையே அருந்த பல நோய்களையும் உண்டாக்கும். மேலும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அதிகமாக நீரை அருந்தக் கூடாது. |
Tuesday, November 1, 2011
நீரினால் ஏற்படும் நன்மைகள்
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment