கற்பிட்டி பிரதேசத்தில் அமைந்திருக்கும் பிரஸ்தாப தீவுகள் மூன்றையும் மாலைதீவு, இந்தியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அமைச்சின் ஊடாக விற்பனை செய்துள்ளார்.
ஆயினும் அது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இதுவரை அறிவுறுத்தப்படவில்லை என்பதுடன் முறையான அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.
வருடமொன்றுக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான குத்தகைக்கு வெள்ளை மற்றும் ஈச்சத்தீவு உள்ளிட்ட மூன்று தீவுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், முப்பது வருடங்கள் வரை அவற்றைத் திரும்பப் பெற முடியாத வகையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொதுச்சொத்துக்களை ராஜபக்ஷ குடும்பம் தங்கள் சொத்துக்களாக கருதி விற்பனை செய்து வருவதற்கு இச்சம்பவம் இன்னோர் உதாரணம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
Source:tamilwin.com



how interesting matter?
ReplyDeleteI Thing Rajapaksa Family Is Beggar Family.
They beg from poor Srilankan People