Breaking

LightBlog

Tuesday, September 14, 2010

கம்ப்யூட்டரில் மின்சார சிக்கனம்


கம்ப்யூட்டர் பயன்பாட்டில் செலவழிக்கப்படும் மின்சக்தி நமக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் அதிலும் நாம் முயன்றால் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம்.
 
1.மானிட்டர் ஸ்கிரீனின் பிரைட்னஸ் குறைத்து வைத்துப் பயன்படுத்தலாம்.
2. கம்ப்யூட்டர் பயன்படுத்தி முடித்தபின்னர் உடனே அதற்கு செல்லும் மின் சக்தியை நிறுத்தி ஆப் செய்திடவும். தேவையில்லாமல் ஸ்லீப் மோடில் வைக்க வேண்டாம்.
3. இன்னும் பழைய சி.ஆர்.டி. (டிவிக்களில் பயன்படுத்தப்படும் கதோட் ரே ட்யூப் ) கொண்ட மானிட்டர் பயன்படுத்துவதாக இருந்தால் உடனே எல்.சி.டி. மானிட்டருக்கு மாறவும். ஏனென்றால் எல்.சி.டி மானிட்டர் சி.ஆர்.டி. மானிட்டரின் மின் சக்தியில் மூன்றில் ஒரு பங்கு மின் சக்தியையே பயன்படுத்துகிறது. அது மட்டுமின்றி கண்களுக்கும் அதிக வேலைப் பளுவைத் தருவதில்லை. 4. ஸ்கிரீன் சேவரை எல்லாம் நிறுத்தி விடுங்கள். இவை மானிட்டருக்கான மின் சக்தியைச் சாப்பிடும் சமாச்சாரங்களாகும். ஒரே திரைக் காட்சி உறைய வைப்பதைத் தடுக்கவே ஸ்கிரீன் சேவர்கள் வந்தன. ஆனால் இப்போது அது போல உறையும் தன்மைகள் எல்லாம் கிடையாது.
5. கோடை அல்லது குளிர் கால விடுமுறையின் போது வெகு நாட்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால் முழுமையாக மின் சக்தி இணைப்பைத் தரும் ப்ளக் இணைப்புகளை நீக்கிவிடவும்.
6. புதிய கம்ப்யூட்டர் வாங்குகையில் எனர்ஜி ஸ்டார் சர்டிபிகேட் கொண்டுள்ளதா எனப் பார்த்து வாங்கவும்.
7. கம்ப்யூட்டர், மானிட்டர் மற்றும் துணை சாதனங்களில் பவர் சேவிங் வழிகள் இருந்தால் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment

Adbox