கம்ப்யூட்டரில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில், குறிப்பாக
பழைய விண்டோஸ் பதிப்புகளில், திடீரென ஸ்கிரீன் முழுக்க நீல நிறமாக மாறி
வெள்ளை நிற எழுத்துக்களில் ஏதோதோ செய்திகள் வரும். நாம் ஒரு நிமிஷம் என்ன
செய்வது என்று தெரியாமல் விழிப்போம். தயாரித்துக் கொண்டிருந்த பைல் சேவ்
செய்யப்படாமல் உழைப்பை இழந்து விடுவோமா எனப் பதட்டம் அடைவோம். அவசர
பயத்தில் எதை எதையோ
பழைய விண்டோஸ் பதிப்புகளில், திடீரென ஸ்கிரீன் முழுக்க நீல நிறமாக மாறி
வெள்ளை நிற எழுத்துக்களில் ஏதோதோ செய்திகள் வரும். நாம் ஒரு நிமிஷம் என்ன
செய்வது என்று தெரியாமல் விழிப்போம். தயாரித்துக் கொண்டிருந்த பைல் சேவ்
செய்யப்படாமல் உழைப்பை இழந்து விடுவோமா எனப் பதட்டம் அடைவோம். அவசர
பயத்தில் எதை எதையோ
செய்து பின் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்வோம். இந்த மாதிரி
செய்திகள் பலவகைகள் உள்ளன. இப்படிப்பட்ட செய்திகள் வரும்போது
பதட்டப்படாமல் அது என்ன எனப் படித்து அறிய வேண்டும். அதற்கான காரணத்தை
உணர்ந்து செயல்பட வேண்டும்.
நீங்கள் இயக்கும்
கம்ப்யூட்டரின் இயக்கத்தில் வழக்கத்திற்கு மாறான அல்லது கம்ப்யூட்டரின்
சிபியு எதிர்பார்க்கும் செயல்பாடு இல்லாத நிலையிலேயே இந்த பிழைச்செய்திகள்
வருகின்றன. இங்கு சில முக்கிய பிழைச்செய்திகளையும் அவை கிடைப்பதற்கான
காரணத்தையும் அத்தகைய சூழ்நிலைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதனையும்
காணலாம்.
This program is not responding End
Now Cancel நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் கம்ப்யூட்டருடன்
தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாத நிலை வருகையில் இந்த செய்தி
கிடைக்கிறது. புரோகிராம் ஏதாவது ஒரு செயல்பாட்டில் கிராஷ் ஆகி இருக்கும்.
End Now / Cancel என இரு வழிகளுடன் உங்களுக்கு செய்தி கிடைக்கும். இது
பொதுவாக பழைய கம்ப்யூட்டர்களில் ஏற்படும். புரோகிராமினைச் சிக்கலான
செயல்பாட்டிற்கு உட்படுத்தி இருப்போம். அதற்கான செயல்வேகம் இல்லாத போது
இந்த செய்தி கிடைக்கலாம். இந்நிலையில் Cancel கிளிக் செய்து புரோகிராம்
மீண்டும் இயங்குகிறதா எனப் பார்க்கலாம். அல்லது End Now கிளிக் செய்து
புரோகிராமை மூடிப் பின் மீண்டும் இயக்கலாம். இவ்வாறு முடிக்கையில் நாம்
கடைசியாக சேவ் செய்தவரையில் பைல் கிடைக்கும். சேவ் செய்யாமல் மேற்கொண்ட
பணிகளை இழக்க வேண்டியது தான்.
Non system disk or disk error. Replace and press any key when ready.
ஒரு
கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்திட அதற்கான டிஸ்க்கைக் கம்ப்யூட்டர் படிக்க
இயலாத போது இந்த செய்தி கிடைக்கும். இது பெரிய தவறு இல்லை. நீங்கள் இதற்கு
முன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில்
இருந்து எடுக்காமல் விட்டிருப்பீர்கள். அப்படி இருந்தால் டிஸ்க்கை
எடுத்துவிட்டு ஸ்டார்ட் செய்திடவும். இல்லை எனில் இது ஹார்ட் வேர்
பிரச்னையாக இருக்கும். மின்சாரத்தை நிறுத்திவிட்டு கேபினைத் திறந்து
அனைத்து கேபிள்களும் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா எனச் சோதித்து சரி
செய்திடவும். பின் கம்ப்யூட்டரை இயக்கவும். மீண்டும் இயங்கவில்லை என்றால்
கம்ப்யூட்டர் மெக்கானிக்கைக் கூப்பிடவும்.
An exception OE has
occured அனைத்து புரோகிராம்களும் இயங்குவதற்கு மெமரி தேவைப்படுகிறது.
ஒவ்வொன்றுக்கும் தேவையான மெமரியை கம்ப்யூட்டர் வழங்குகிறது. ஆனால் ஒரு
புரோகிராம் தனக்கு அனுமதி வழங்கப்படாத மெமரி இடத்தை ஆக்ரமிக்க
முற்படுகையில் இந்த செய்தி கிடைக்கிறது. இந்த செய்தி அடிக்கடி கிடைத்தால்
அண்மையில் இன்ஸ்டால் செய்த புரோகிராமை நீக்கிப் பார்க்கவும். அல்லது வேறு
ஏதேனும் மாற்றங்கள் செய்திருந்தால் அதனை முன்பிருந்தபடி அமைக்கவும்.
இதற்கு System Restore என்ற புரோகிராம் உங்களுக்கு உதவும்.
An
error has occurred in your program. To keep working anyway, click
ignore and save your work to a new file. To quit this program, click
Close இயக்கப்படும் புரோகிராமில் ஏதேனும் புரோகிராமிங் பிழை (bug)
இருப்பின் இந்த செய்தி கிடைக்கும். இந்த செய்தி காட்டப்பட்டாலும் அந்த
புரோகிராமினை உங்களால் தொடந்து இயக்க முடியும். அப்படி விரும்பினால்
Ignore என்பதைக் கிளிக் செய்து தொடருங்கள். உங்கள் பணியை புதிய பெயருள்ள
பைலில் சேவ் செய்திடுமாறு செய்தி கிடைத்துள்ளது. ஏற்கனவே நீங்கள்
பணியாற்றிக் கொண்டிருக்கிற பைல் கெட்டுப் (corrupt) போயிருக்கலாம். எனவே
புதிய பெயர் கொடுத்து சேவ் செய்து பணியைத் தொடரவும்.
Duplicate
Name exists இது போன்ற செய்தி நெட்வொர்க்கில் பணியாற்றுகையில் வரும்.
நெட்வொர்க்கில் இணைந்துள்ள ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு பெயர் உண்டு.
இல்லை எனில் கம்ப்யூட்டரை நெட்வொர்க்கில் இயக்க முடியாடு. இந்த செய்தி
கிடைத்தால் ஏற்கனவே இதே பெயரில் இன்னொரு கம்ப்யூட்டர் அந்த நெட்வொர்க்கில்
உள்ளது என்று பொருள். எனவே நீங்கள் இயக்க விரும்பும் கம்ப்யூட்டரில் மை
கம்ப்யூட்டர் ஐகானை வலது புறமாகக் கிளிக் செய்து Computer Name என்னும்
டேபைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Change என்பதைக் கிளிக் செய்து
கம்ப்யூட்டருக்குப் புதிய பெயர் ஒன்றைக் கொடுத்து பின் ஓகே அழுத்தி
வெளியில் வந்து கம்ப்யூட்டரைத் தொடர்ந்து இயக்கவும்.
A
runtime error has occurred. Do you wish to debug? இன்டர்நெட்
எக்ஸ்புளோரர் தொகுப்பினை இயக்குகையில் இந்த செய்தி கிடைக்கும். இது
நீங்கள் இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் வெப் சைட் உருவாக்கத்தில்
உள்ள பிழையினால் ஏற்படுவது. இதனால் சிறிதும் கவலைப்பட வேண்டாம். debug
செய்வது என்பதெல்லாம் புரோகிராமர்கள் பார்க்க வேண்டிய சமாச்சாரம். இந்த
மாதிரி செய்தி எல்லாம் பின் எனக்கு ஏன் வருகிறது என்று நீங்கள் கவலைப்
பட்டால் இப்படிப்பட்ட செய்தி வருவதனைத் தடுத்துவிடலாம். Tools பிரிவு
சென்று Internet Optionsகிளிக் செய்து பின் Advanced டேபைத்
தேர்ந்தெடுக்கவும். பின் Browsing பிரிவில் Disable Script Debugging
என்பதில் டிக் செய்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த பிழை
செய்தி கிடைக்காது.
The margins of section
& are set outside the printable area of the page. Do you want to
continue? in Word பல பிரிண்டர்கள் ஒரு தாளின் முழு அளவில் ஒரு பக்கத்தினை
அச்சடிக்காது. மார்ஜின் ஸ்பேஸ் என்று சொல்லப்படும் நான்கு பக்க இட வெளி
அச்சடிக்கத் தேவை. மேற்காணும் செய்தி மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில்
கிடைத்தால் No என்பதில் கிளிக் செய்து பின் அந்த டாகுமெண்ட்டின் பேஜ் செட்
அப் சென்று பார்த்து மார்ஜின் மற்றும் பேப்பர் அளவை மாற்ற வேண்டும்.
அச்செடுப்பதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ பார்த்தால் எந்த அளவில் பிரிண்ட்
ஆகும் எனத் தெரியும். அதற்கேற்ற வகையில் அளவைச் சரி செய்து பின் பிரிண்ட்
கொடுக்க வேண்டும்.



No comments:
Post a Comment