Breaking

LightBlog

Tuesday, August 24, 2010

MicroSoft's RichCopy - கோப்புகளை வேகமாக பிரதி எடுக்க இலவச மென்பொருள்


வணக்கம் நண்பர்களே,
நமது கோப்புகளை நகலாக்கி சேமிக்க விண்டோசில் கோடா நிலையில் உள்ள Ctrl + C மற்றும் Ctrl + V பயன்படுத்துவோம்.இது நமது கணினியில் உள்ள கோப்புகளை பிரதி எடுக்க உதவுகின்றது.இதுவே பிணையத்தில் உள்ள மற்ற கணினிகளில் இருந்து பிரதி எடுக்கும்போது இது மிகவும் மந்தமாக செயல்படும்.நமது பிணையத்தில் எதாவது பிரச்னை என்றால்இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும்.இந்த மாதிரி சமயங்களில் நமக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட மென்பொருள்தான் MicroSoft's RichCopy. இது ஒரு இலவச மென்பொருள்.இதை ஏனோ மைக்ரோசாப்ட் தனது இயங்குதளங்களில் இந்த வசதியை இணைக்கவில்லை. கோப்புகளை பிரதி எடுக்க ஒரு சிறந்த மென்பொருளான இதனை எப்படி நமது கணினியில் தரவிறக்கி நிறுவுவது எப்படி என்று கீழே படங்களுடன் விளக்கி உள்ளேன்.

இது ஒரு Self Extractor. இதனை தரவிறக்கிய பின்,டபுள் கிளிக் செய்து சேமியுங்கள்.

உங்களுக்கு வேண்டிய இடத்தில் கோப்புகளை சேமியுங்கள்.



இப்போது அந்த உறையில் (Folder) நுழைந்து ,setup.exe என்பதனை கிளிக் செய்யுங்கள்.



அவ்வளவுதான் RichCopy-ஐ கணினியில் பதிந்து விட்டீர்கள்.இப்போது அதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்போம் .

அதன் முகப்பு :

பிரதி எடுக்க வேண்டிய கோப்பின் மூலத்தையும் ,பிரதி எடுக்க படவேண்டிய இடத்தையும் தேர்வு செய்யுங்கள்.

தேர்வு செய்த பின் Start Copy என்ற பட்டனை சொடுக்குங்கள்.

கோப்புகள் பிரதி எடுக்கப்படுகின்றது:

பிரதி எடுப்பது நிறைவடைந்தது :


விரும்பியவற்றை தேர்ந்தெடுக்க Option என்பதனை சொடுக்குங்கள்.

No comments:

Post a Comment

Adbox