சித்த மருத்துவத்தின் மூலம்/ என்ன?
சித்தம்,ஆயுர்வேதம்,யுனானி முதலிய இன்திய மருத்துவ முறைகள் மட்டுமல்லாது, உலகின் ஏனைய பிற சுஜோக்,கம்போ,சீனம்,அக்யுபன்க்சர்,திபத்திய,மலாய் போன்ற எல்லா பாரம்பரிய மருத்துவ முறைகளும் பஞ்ச பூத அடிப்படையில் அமைந்தது.இம் மருத்துவ முறைகளுக்கு ஆதாரமான மெய்யியல் தத்துவம் ஆசிவகமாக இருக்குமோ எனும் கருதுகோள் பேரா.னெடுஞ்செழியனின்,ஆசிவகம் நூல் படித்த பின்பு வருகிறது.
அன்னார்தம் இன்னொரு உரையில்,ஆசிவகத்துக்கு முந்தய தந்திரியம்,தேகவாதம் முதலான மெய்யியல் தத்துவங்கள் இந்த பஞ்சபூத அடிப்படையினை விளக்க முற்பட்டவை,என்று கூறினார்.இவற்றை கொண்டு பார்க்கையில் சைவசித்தாந்தம் எப்படி,எப்போது சித்த மருத்துவத்தை கையில் எடுத்தது?என்ற கேள்வி எழுகிறது. சித்தமருத்துவம் சொல்லும் 96 தத்துவஙகள் ஆசீவக கருத்தின் அடிப்படையா,சைவசித்தாந்த அடிப்படையா என்ற கேள்விக்கு விடை தேடியாக வேண்டும்



No comments:
Post a Comment